News March 24, 2025
மரத்தில் கார் மோதி விபத்து மாணவி பரிதாப பலி

தாம்பரத்தைச் சேர்ந்தவர் முகமது ஆவேஷ், இவர், நேற்று காலை ஆந்திர, வரதையாபாளையம் நீர்வீழ்ச்சிக்கு, காரில் 8 பேர் பயணித்த நிலையில், கும்மிடிப்பூண்டி அருகே பெரியவேடு பகுதியில், முன்னாள் சென்ற லாரி ஒன்று குறுக்கிட்டதால், காரை இடதுபுறமாக திருப்ப முயன்றார். கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த தென்னை மரம் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் கல்லூரி மாணவி சம்ரீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News December 1, 2025
திருவள்ளூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு <
News December 1, 2025
திருவள்ளுர்: கார் மின்கம்பம் மீது மோதி விபத்து!

கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஜேக்கப் எபினேசர் (53), திருமுல்லைவாயில் அருகே காரை ஓட்டிச் சென்றபோது தூக்கக் கலக்கத்தில் மின் கம்பத்தின் மீது மோதி, கார் தலைகுப்புற கவிழ்ந்தது. காரில் ஏர் பேக் இருந்ததால், அதிர்ஷ்டவசமாக அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 1, 2025
திருவள்ளூர்: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <


