News March 31, 2025
மரக்கிளை முறிந்து 11 வகுப்பு மாணவன் உயிரிழப்பு

சீத்தப்பட்டியை சேர்ந்தவர் தென்னரசு(17). இவர் கடந்த 27ம் தேதி கரூர் காந்தி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதிவிட்டு, திருச்சி சாலை கவுண்டம்பாளையம் பகுதியில் டூவீலரில் சென்ற போது சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் கிளை முறிந்து அவர் மீது விழுந்தது. அதில் தலையில் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News July 7, 2025
கரூர்: வீடு வாங்க ரூ.75 லட்சம் கடனுதவி!

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மூலம் வீடு வாங்க, கட்ட, நீட்டிக்க, பராமத்துப் பணிகள் செய்ய கடனுதவி வழங்கப்படுகிறது. ரூ.75,00,000 வரை வழங்கப்படும் இந்தக் கடன் தொகையை 20 ஆண்டுகளுக்குள் செலுத்தி முடிக்கலாம். உங்களின் CIBIL score அடிப்படையில் வட்டி விகீதம் நிர்ணயிக்கப்படும். இதற்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கியை அணுகி தெரிந்து கொள்ளலாம். <<16973877>>மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக்.<<>>
News July 7, 2025
கூட்டுறவு வங்கியில் ஹோம் லோன் பெறுவது எப்படி?

▶️நீங்கள் அரசு வேலையிலோ, அரசு சார்ந்த நிறுவனத்திலோ, அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்திலோ பணிபுரிபவராக இருத்தல் வேண்டும்.
▶️நிலையான வருவாய் ஈட்டும் தொழில் செய்பவராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்
▶️நீங்கள் சம்பளத்திற்கு வேலை பார்ப்பவராக இருந்தால் form 16 அல்லது சம்பள சான்றிதழ் அவசியம்.
<
News July 7, 2025
கரூர்: கார் விபத்தில் இளைஞர் பலி

கரூர்: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கவிதா(45), அவரது மகன் ஆகாஷ்(28), மகனின் நண்பர் தினேஷ்(27), செல்வகுமார்(27) ஆகியோர் மண்மங்கலம் பகுதியில் உள்ள சேலம் சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது நிலை தடுமாறிய கார் சாலையோர போர்டில் மோதி விபத்தானது. இதில், படுகாயமடைந்த தினேஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.