News March 28, 2025
மயிலை மக்களே உஷார் – யாரும் வெளிய வராதிங்க!

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் 98 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
Similar News
News November 7, 2025
மயிலாடுதுறை: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, குத்தாலம், செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் நேரடி தொலைபேசி எண்களுக்கு, தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.
News November 6, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2112 பேர் தேர்வு எழுத உள்ளனர்

டிஎன்யுஎஸ்ஆர்பி நடத்தும் இரண்டாம் நிலை காவலர் தேர்வு வருகிற 9 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 1542 ஆண்கள் மற்றும் 570 பெண்கள் என மொத்தம் 2112 பேர் தேர்வு எழுத உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏவிசி கலைக்கல்லூரியில் ஆண் விண்ணப்பதாரர்கள் மற்றும் ஏவிசி பொறியியல் கல்லூரியில் பெண் விண்ணப்பதாரர்கள் என இரண்டு தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.
News November 6, 2025
மயிலாடுதுறை: மாணவர் விடுதியில் ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடியில் உள்ள சமூக நீதி கல்லூரி மாணவர் தங்கம் விடுதியில், இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ சார்ந்தவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்டார். இதில் மாணவர் விடுதியில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா, பாதுகாப்பு உள்ளதா என பார்வையிட்டு ஆய்வு செய்து கேட்டறிந்தார்.


