News May 21, 2024
மயிலூற்று அருவியில் நீர்வரத்து
பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக விளங்கும் பச்சைமலை அடிவாரத்தில் உள்ள இலாடபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள மயிலூற்று அருவியில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக தற்போது இந்த அருவியில் நீர்வரத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் மட்டுமல்லாது பெரம்பலூர் மாவட்ட மக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News November 20, 2024
பெரம்பலூர்: “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம்
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பெரம்பலூர் வட்டம், வேலூர் ஊராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்தல் குறித்து நியாவிலைக்கடை, குழந்தைகள் மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கள ஆய்வினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மேற்கொண்டார்.
News November 20, 2024
விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர் ஆதிதிராவிடர் நலத்துறையில் 2024 – 25 ஆம் ஆண்டிற்கு, டாக்டர் அம்பேத்கர் பெயரில் பட்டியல் இன முன்னேற்றத்திற்கு தொண்டாற்றி வருபவர்களுக்கு, டாக்டர் அம்பேத்கர் விருது ஜனவரி 2025 இல் திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்பட உள்ளது. பட்டியல் இனத்தவருக்கு அரிய தொண்டாற்றி வரும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள் போன்ற நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். SHAREIT
News November 20, 2024
விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிடர் நலத்துறையில் 2024 – 25 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் பெயரில் பட்டியல் இன முன்னேற்றத்திற்கு தொண்டாற்றி வருபவர்களுக்கு, டாக்டர் அம்பேத்கர் விருது ஜனவரி 2025 இல் திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்பட உள்ளது. எனவே பட்டியல் இனத்தவருக்கு அரிய தொண்டாற்றி வரும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள் போன்ற தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.