News August 18, 2024
மயிலாடுதுறை விளையாட்டு வீரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை 2024-2025 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. மேலும் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 27, 2025
மயிலாடுதுறை: கணவன் அடித்தால் CALL பண்ணுங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, மயிலாடுதுறை மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை ( 8838595483) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்கள்
News November 27, 2025
மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சீர்காழி நகராட்சி பகுதியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் திரும்பப் பெரும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் படிவங்களை விரைந்து பெற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
News November 27, 2025
மயிலாடுதுறை: பாம்பு கடித்து பள்ளி சிறுவன் பலி!

நீடூர் உக்கடை வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்துரு (12) நெய்தவாசலில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று சந்துரு வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தான். அப்போது வீட்டின் அருகே கிடந்த கட்டுவிரியன் பாம்பு அவனை கடித்தது. இதையடுத்து குடும்பத்தினர் சந்துருவை சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சந்துரு உயிரிழந்தார்.


