News August 3, 2024
மயிலாடுதுறை வழியாக முன்பதிவு இல்லா சிறப்பு ரயில்

திருச்சியில் இருந்து மயிலாடுதுறை வழியாக முற்றிலும் முன்பதிவு இல்லாத மெமூ ரயில் சென்னை செல்கிறது. (ஆகஸ்ட்.3) சனிக்கிழமை இரவு 10.30 திருச்சியில் இருந்து புறப்பட்டு மயிலாடுதுறைக்கு இரவு 12.35 வரும் இந்த ரயிலானது தாம்பரத்தை காலை 5:50 மணிக்கு சென்றடையும். சென்னை செல்வோர் இந்த இரயிலை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News December 9, 2025
மயிலாடுதுறை: மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை

வட தமிழகம் மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் காற்று வீசும் என்பதாலும், மணிக்கு 55 கிலோமீட்டர் வேகம் வரை காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 28 மீனவ கிராம மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்லக்கூடாது, என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
News December 9, 2025
மயிலாடுதுறை: மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர் விரோத 4 சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிணைந்து, மத்திய அரசை கண்டித்தும் எதிரான கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
News December 9, 2025
மயிலாடுதுறை: ரயில்வே வேலை – MISS பண்ணிடாதீங்க!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.35,400
5. கல்வித்தகுதி: BE , டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 10.12.2025
7. விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.


