News April 26, 2025
மயிலாடுதுறை: மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் பலி

கருவாழக்கரை மேலையூர் உத்திராபதியார் ஆலய அமுதுபடையல் திருவிழாவிற்க்காக அமைக்கப்பட்டிருந்த ஒலி ஒளியின் மின் கம்பியை சரியான முறையில் கட்டாததால் அறுந்து கீழே விழுந்ததில் அருகே விளையாடிக் கொண்டிருந்த மேலையூர் வடக்கு தெருவை சேர்ந்த தங்கதுரை மகன் தமிழ்துரை (வயது15) மின்சாரம் தாக்கி நேற்று இரவு சம்பவ இடத்திலேயே பலியானார். சிறுவன் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 27, 2025
சிறுமியை திருமணம் செய்து ஏமாற்றிய கொத்தனார்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 17 வயது சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் சிறுமியிடம் விசாரித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுமியை திருமணம் செய்து ஏமாற்றிய செம்பனார்கோயில் முடிகண்டநல்லூர் பகுதியை சேர்ந்த கொத்தனார் சுந்தர்ராஜ் (28) என்பவரை கைது செய்தனர்.
News April 27, 2025
மயிலாடுதுறை: விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு !

இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் காலியாக உள்ள 309 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் (Air Trafiic Controller) பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி பி.ஈ /பி.டெக் முடித்த பொறியியல் பட்டதாரிகள் www.aai.aero என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலைதேடும் உங்க நண்பருக்கு இதனை SHARE செய்யவும்..
News April 27, 2025
மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் Customer Care Executive பதவிக்கு 50 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் இங்கே<