News March 17, 2025
மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் கவனத்திற்கு

டெலிகிராம் குரூப்பில் இணையுங்கள் அதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறி மோசடி செய்யும் கும்பல் பெருகி வருகிறது. எனவே பொதுமக்கள் அவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. Share It
Similar News
News April 18, 2025
நாளை இலவச முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம்

மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் தர்மபுரம் கலைக்கல்லூரி தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை சார்பில் தருமபுரம் ஆதீனம் மணிவிழாவை முன்னிட்டு நாளை சனிக்கிழமை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் காலை 8:30 மணி முதல் 2:00 மணி வரை இலவச முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. முகாமில் ரூ.5000 மதிப்புள்ள இசிஜி எக்கோ ஸ்கேன் பரிசோதனை முற்றிலும் இலவசமாக செய்யப்படவுள்ளது. பொதுமக்கள் பங்கேற்று பயன பெறலாம்.
News April 18, 2025
விளையாட்டு பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை ராஜன் தோட்டம், சாய் விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே 15 வரை நடைபெறவுள்ளது என மாவட்டஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மாவட்ட அளவிலான இருப்பிடமில்லா கோடைக்கால பயிற்சி முகாம் 18 வயதிற்குள்பட்ட பள்ளி மாணவர்கள், மாணவியர்கள் மற்றும் மாணவர்ருக்கு மயிலாடுதுறை ராஜன்தோட்டம் சாய் விளையாட்டரங்கில் ஏப்.25 முதல் மே 15 வரை நடைபெறவுள்ளது என்றார்.
News April 18, 2025
மயிலாடுதுறை:ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு?

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRBs) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.ஈ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் rrbchennai.gov.in என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.05.2025. மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.