News April 25, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குட்கா விற்பனை மற்றும் கடத்தல் குற்றம் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க இலவச உதவி எண் 10581 அல்லது அலைபேசியில் 9626169492 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
Similar News
News April 26, 2025
மயிலாடுதுறை: கூலித்தொழிலாளி தற்கொலை

மணல்மேடு அருகே காருக்குடி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வேல்முருகன் (39). சம்பவத்தன்று வேல்முருகன், மது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றபோது, அவருக்கும், குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில், மன வேதனை அடைந்த வேல்முருகன், தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 25, 2025
ராகு கேது தோஷம் நீக்கும் நாகநாதசுவாமி கோயில்

மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளத்தில் நாகநாதசுவாமி கோயில் உள்ளது. நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. நாளை ஏப்.26 மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE IT.
News April 25, 2025
மயிலாடுதுறையில் ஜமாபந்தி ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே 8ஆம் தேதி ஜமாபந்தி தொடங்க உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் உள்ள நான்கு வருவாய் வட்டங்களிலும் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மே.8ஆம் தேதி முதல் மே.15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாள்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய் தீர்வாய அலுவலரிடம் அளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.