News April 4, 2025
மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

உழவர் பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு, மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் வருகிற ஏப். 8 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளதென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து மரணம் ஆகியவற்றிற்கு நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.
Similar News
News July 11, 2025
மயிலாடுதுறை கலெக்டர் எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூலை 15ஆம் தேதி முதல் 130 இடங்களில் நடைபெற உள்ள “உங்களுடன் ஸ்டாலின் ” முகாம்களில் மட்டுமே இரண்டாம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான படிவங்கள் வழங்கப்படும். தனியார் கடைகளிலும், வணிக நிறுவனங்களிலும் போலியாக விற்கப்படும் விண்ணப்பங்களை வாங்கி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
News July 11, 2025
நலவாழ்வு சங்கத்தில் தற்காலிக காலிப்பணியிடங்கள் – ஆட்சியர்

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் தற்காலிக காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதில் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெற்று பூர்த்தி செய்து செயற்செயலாளா், மாவட்ட சுகாதார அலுவலகம், 7-வது தளம், ஆட்சியா் அலுவலக வளாகம், மயிலாடுதுறை 609001 என்ற முகவரிக்கு விரைவுத் தபால் (அ) பதிவுத்தபால் மூலம் ஜூலை 21க்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
News July 11, 2025
மகளிா் உரிமைத் தொகை பெற மீண்டும் ஒரு வாய்ப்பு: ஆட்சியா்

மயிலாடுதுறையில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தில் பயனடைய ஜூலை 15 முதல் அக்.15 வரை நடைபெறவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். 2ஆம் கட்டமாக 130 இடங்களில் நடைபெறவுள்ள முகாம்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். தனியாா் கடைகள், வணிக நிறுவனங்களில் போலியாக விற்கப்படும் மகளிா் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களை வாங்கி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.