News April 4, 2025
மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

உழவர் பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு, மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் வருகிற ஏப். 8 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளதென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து மரணம் ஆகியவற்றிற்கு நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.
Similar News
News December 1, 2025
மயிலாடுதுறை: கனமழையால் இடிந்து விழுந்த சுவர்!

கொள்ளிடம் ஒன்றியம் கீழவல்லம் பகுதியில் வசித்து வரும் ஆனந்தன் -பவானி என்பவரது தொகுப்பு வீட்டின் முகப்பு சுவர் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் இன்று காலை இடிந்து விழுந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்க்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் சென்று பார்வையிட்டார். அவரிடம் கடந்த ஆண்டு ஆனந்தன் இறந்து விட்ட நிலையில் தற்பொழுது வீடு சேதமடைந்துள்ளதால் நிவாரணம் பெற்றுத்தர கோரிக்கை விடுத்துள்ளார்.
News December 1, 2025
மயிலாடுதுறையில் கொட்டித்தீர்த்த கனமழை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. நேற்று நள்ளிரவு வரை இடைவிடாது மழை பெய்த நிலையில் இன்று காலை முதல் சற்று மழை ஓய்ந்துள்ளது. நேற்று காலை முதல் இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி அதிகபட்சமாக சீர்காழியில் 41.30 மிமீ மழை பெய்துள்ளது மயிலாடுதுறையில் 23.50மிமீ மணல்மேட்டில் 22மிமீ, கொள்ளிடத்தில் 36மிமீ, தரங்கம்பாடியில் 29.50மிமீ, செம்பனார் கோயிலில் 24மிமீ பதிவாகியுள்ளது
News December 1, 2025
மயிலாடுதுறை: மூழ்கிபோன 35,000 ஏக்கர் சாகுபடி நிலம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல இடங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. வடிகால்களை தூர்வாராதது தான் இந்த பாதிப்புக்கு காரணம் என விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மேலும் வருங்காலங்களிலாவது வடிகால் வாய்க்கால்களை முறையாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


