News January 24, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை 25.01.2025 சனிக்கிழமை அன்று அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் நீர்நிலைகளில் தேங்கியுள்ள நெகிழி கழிவுகளை சேகரிக்கும் இயக்கம் சிறப்பாக நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இப்பேரியக்கத்தில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 13, 2025
மயிலாடுதுறை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News November 13, 2025
மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் தற்போது சாகுபடி செய்துள்ள சம்பா தாளடி பயிர்களை, இயற்கை இடர்பாடுகளில் இருந்து பாதுகாக்க பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் நவம்பர் 15க்குள் காப்பீடு செய்து கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கான பயிர் காப்பீட்டு பிரிமியம் தொகையாக ரூ.564ஐ அருகில் உள்ள பொது சேவை மையங்களில் செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் (4.11.2025) முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கெடுப்பு பணிகள் வருகிறது. இதில் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, இன்று (13.11.2025) மயிலாடுதுறை நகராட்சி காவேரி நகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


