News August 17, 2024
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒவ்வொரு காலாண்டிலும் 18 வயது நிறைவடைந்த இளைஞர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை முன்கூட்டியே வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருப்பதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News September 18, 2025
சீர்காழி அரசு மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியீடு

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்டதில் கர்ப்பிணி பெண்களுக்கு காய்ச்சல் நடுக்கம் ஏற்பட்ட விவகாரத்தில் அரசு மருத்துவமனையை சார்பில், ஒரு பக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காய்ச்சல் நடுக்கம் ஏற்பட்ட 27 கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு மாற்று மருந்து கொடுத்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் சிகிச்சை பெற்று வருவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
News September 18, 2025
மயிலாடுதுறை: ரூ.62,000 சம்பளத்தில் சூப்பர் வேலை!

மயிலாடுதுறை மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
✅துறை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
✅பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
✅கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு
✅சம்பளம்: ரூ.15,900 –ரூ.62,000
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅கடைசி தேதி: 30.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..
News September 18, 2025
சீர்காழி: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலெக்டர் ஆய்வு

சீர்காழி வட்டம் நிம்மேலி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடைபெற்று வருகிறது முகாமினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்மேலும் பல்வேறு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார். ஆய்வின்போது கோட்டாட்சியர் சுரேஷ் வட்டாட்சியர் அருள்ஜோதி ஆகியோர் உடன் இருந்தனர்.