News April 9, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் , உணவு நிறுவனங்கள் , மோட்டார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் வருகின்ற ஏப்ரல் 19 மக்களவைத் தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் விடுமுறை அளிக்காத நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

Similar News

News April 17, 2025

வராக ஜெயந்திக்கு இதை மறக்காதீங்க

image

இரண்யாட்சன் என்ற அசுரனிடம் இருந்த இந்த பூமியை காக்க விஷ்ணு பகவான் எடுத்த மூன்றாவது அவதாரம் தான் வராக அவதாரம். நாளை வராக ஜெயந்தி திதி வர உள்ளது. இந்த நாளில் வராகரை வழிபட்டால் பெயர், புகழ், அந்தஸ்து, ஆயுள் ஆரோக்கியம், ஐஸ்வரியம் இவை எல்லாம் ஒரு சேர கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படி இல்லையெனில் வீட்டிலேயே பெருமாள் படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபடலாம். உங்கள் உறவினருக்கும் ஷேர் செய்யுங்கள்..

News April 17, 2025

மயிலாடுதுறை: ரூ.56,100 சம்பளத்தில் அரசு வேலை

image

TNPSC குரூப் 1 வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் என மொத்தமாக 72 காலிப்பணியிடங்கள் உள்ளது. 21 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டபடிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.56,100 முதல் 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய <>tnpsc.gov.in<<>> என்ற இணையத்தில் பார்க்கலாம். இதை SHARE செய்யவும்

News April 17, 2025

மயிலாடுதுறையில் கட்டுரை, பேச்சுப் போட்டி, ஆட்சியர் அழைப்பு

image

மயிலாடுதுறை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சு போட்டி நடைபெறவுள்ளது. தமிழ் வளர்ச்சி சார்பில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் மே 9ஆம் தேதி நடைபெற உள்ளது. பிளஸ் 1 & பிளஸ் 2 மாணவர்களுக்கு தியாகி நாராயணசாமி நகராட்சி பள்ளியிலும், கல்லூரி மாணவர்களுக்கு ஞானாம்பிகை கல்லூரியிலும் காலை 9 மணிக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!