News April 30, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜமாபந்தி- ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய 4 தாலுகாகளிலும் வருகிற மே 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற உள்ளது. இதற்காக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வேளாண்துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய் தீர்வாய அலுவலரிடம் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 31, 2025
மயிலாடுதுறை: குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

சீர்காழி தென்பாதி வஉசி தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (48). கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற சங்கர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை திருவேங்கடம் பிள்ளை குளத்தில் சங்கர் தண்ணீர் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த சீர்காழி போலீசார் உடலை மீட்டு, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News October 31, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். 3 பேர் பயணம் செய்யக் கூடாது எனவும், அப்படி போக்குவரத்து விதிமுறைகள் மீறி பயணம் செய்யாமல் விபத்தை தவிர்ப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.
News October 31, 2025
மயிலாடுதுறை: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, குத்தாலம், செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் நேரடி தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்


