News August 11, 2024
மயிலாடுதுறை மாவட்டத்தில் இடி மின்னலுடன் மழை

தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்திற்கு 8 மாவட்டங்களில், இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 25, 2025
மயிலாடுதுறை: சொந்தமாக தொழில் தொடங்க வாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்ட இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News November 25, 2025
மயிலாடுதுறை: பூட்டை உடைத்து திருட்டு!

மாப்படுகையைச் சேர்ந்தவர் குணசேகரன் (57). இவர் குடும்பத்துடன் கடந்த 21-ந்தேதி காரைக்குடி சென்றுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு 9 பவுன், 2 கிராம் நகைகள் மற்றும் வெள்ளி காணாமல் போயிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த குணசேகரன் இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 25, 2025
மயிலாடுதுறை: வெளுத்து வாங்கிய கனமழை

மயிலாடுதுறை மாவட்டம் மங்கநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மழை குறைந்து வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரம் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்தது தொடர் மழையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.


