News August 6, 2024
மயிலாடுதுறை – பெங்களூர் வரை செல்லும் ரயில் நிறுத்தம்

பெங்களூரில் இருந்து ஆகஸ்ட் இன்று முதல் 9 மற்றும் 11-ம் தேதிகளில் புறப்படும் காரைக்கால் விரைவு ரயில், மயிலாடுதுறை வழியாக காரைக்கால் வரை செல்லும் இந்த ரயில், விருத்தாசலம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அதேபோல் காரைக்காலில் இருந்து பெங்களுர் வரை செல்லும் பெங்களுர் விரைவு இரயில் 7 முதல் 10-ம் தேதி மற்றும் 12 தேதி வரை விருத்தாச்சலத்தில் இருந்து புறப்பட்டு பெங்களூரு வரை மட்டுமே செல்லும்.
Similar News
News November 28, 2025
மயிலாடுதுறை: வங்கி வேலை அறிவிப்பு

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது மாதம் ரூ.15,000 சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News November 28, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தை புரட்டி போட போகும் புயல்

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி வருகிறது. இது மயிலாடுதுறை மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியை கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (நவ.29) பலத்த சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை கொட்டித் தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 28, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக 28,29 மற்றும் 30 தேதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் நீர் நிரம்பியுள்ள நீர் நிலைகளில் குளிப்பதையும் கால்நடைகளை குளிப்பாட்டுவதையும் தவிர்க்க வேண்டும். ஆடு மாடுகளை மின்கம்பத்தில் கட்ட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.


