News December 31, 2024
மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி இன்று பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்து நிலையம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா, பேருந்து நிலையத்தில் குப்பைகள் அகற்றப்படுகிறதா என்றும், பொதுக்கழிப்பறை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தார். இதில் நகராட்சி ஆணையர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Similar News
News December 13, 2025
மயிலாடுதுறை: காவல்துறை எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட பொது மக்கள் சைபர் குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இணையதளத்தில், உங்கள் தனிப்பட்ட தகவல்களை அறிமுகமில்லாத நபர்களுடன் பகிர வேண்டாம். மேலும் சமூக ஊடக கணக்குகளை பலப்படுத்த பிரைவசி செட்டிங் ஐ பயன்படுத்த வேண்டும், உங்கள் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளில் இடம் (LOCATION) பதிவு செய்யும் அம்சத்தை முடக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
News December 13, 2025
மயிலாடுதுறை: ரூ.48000 சம்பளத்தில் வங்கி வேலை!

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!
News December 13, 2025
மயிலாடுதுறை: கோயில் ஆக்கிரமிப்பு இடித்து அகற்றம்

சீர்காழி கடையில் வீதியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட நாகேஸ்வரன் முடையார் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு இடையூறாக இருந்த கட்டிடம் நீதிமன்ற உத்தரவின் பேரில், இடித்து அகற்றப்பட்டது. அறநிலையத்துறை உதவி ஆணையர் ரவிச்சந்திரன் கோவில் நிலங்கள் தாசில்தார் பாலமுருகன் தலைமையில் சிறப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.


