News April 28, 2025
மயிலாடுதுறை: பட்டா, சிட்டாவுக்கு இனி சிரமம் இல்லை

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில் TamilNilam Geo-Info என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில் நாம் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ அந்த கூகுள் மேப்புடன், சர்வே எண் ஆகிய விவரங்கள் தெரியும். இதில் வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்த்து கொள்ளலாம். அனைவருக்கும் Share செய்து பயனடையுங்கள்..
Similar News
News November 26, 2025
மயிலாடுதுறை: பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை வழங்கினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
News November 26, 2025
JUST IN மயிலாடுதுறை: மிக கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் காரணமாக நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் நவ.28 & நவ.29 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 26, 2025
மயிலாடுதுறையில் SIR பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

மயிலாடுதுறை நகராட்சி கேனிக்கரை பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் ஒன்றாக வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் திரும்பப்பெறும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். படிவங்களை விரைந்து பெற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா உடன் பங்கேற்றார்.


