News March 28, 2025
மயிலாடுதுறை: திருநீறு பட்டையுடன் அருள்புரியும் ஆஞ்சநேயர்

மயிலாடுதுறையிலிருந்து 13 கி.மீ தொலைவில் திருக்குரக்காவல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குண்டலகர்ணேஸ்வரர் கோயிலில் ருத்ராட்ச மாலை அணிந்து சிவபக்த ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். சிவஅபராதம் நீங்க ஆஞ்சநேயர் இத்தலத்திற்கு வந்து சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம். தொழில் அபிவிருத்தி ஸ்தலமாக விளங்கும் இங்கு அமாவாசை தினங்களில் ஆஞ்சநேயருக்கு ஹோம பூஜைகள் நடைபெறுகிறது! உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்
Similar News
News December 21, 2025
மயிலாடுதுறை: ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக இருந்த 32 ஊர்க்காவல் படை பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. உடற்தகுதி தேர்வில் 32 பேர் கலந்து கொண்ட நிலையில் தகுதியுடைய 30 பேர் ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 5 ஆம் தேதி தொடங்கி 45 நாட்களுக்கு மயிலாடுதுறை ஆயுதப்படை மைதானத்தில் அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
News December 21, 2025
மயிலாடுதுறை: போக்குவரத்து மாற்றம்

நீடூர்-மயிலாடுதுறை சாலையில் உள்ள ரெயில்வே கேட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் இன்று காலை 8 – 5 மணி வரை ரெயில்வே கேட் மூடப்படவுள்ளது. எனவே இதற்கு பதிலாக, நீடூர் ரெயில்வே கேட் அருகில் உள்ள நீடூர் பாவா நகர்-ஆனந்ததாண்டவபுரம்- மயிலாடுதுறை, கடுவங்குடி- ஆனந்ததாண்டவபுரம் – மயிலாடுதுறை, அருண்மொழித்தேவன் – மகாராஜபுரம்-மாப்படுகை-மயிலாடுதுறை ஆகிய வழித்தடங்களை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 21, 2025
மயிலாடுதுறை: ஆற்றில் மிதந்த குழந்தையின் சடலம்!

மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் காவிரி ஆற்றில் புதுப்பாலத்தின் மேற்கு புறம் பெரிய பிளாஸ்டிக் பையில் குழந்தை ஒன்று மிதந்து வந்தது. இதனை கண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மிதந்து வந்த பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையை மீட்டனர். இதில் உள்ளே இருந்த பச்சிளம் பெண் குழந்தை இறந்து விட்டது என தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்


