News November 23, 2024
மயிலாடுதுறை-திருச்சி ரயில் 2 நாட்கள் ரத்து

மயிலாடுதுறையில் இருந்து காலை 8.05 மணிக்கு திருச்சி செல்லும் ரயிலானது பராமரிப்பு பணி காரணமாக நாளை நவ.23 (சனிக்கிழமை) மற்றும் நவ.25 (திங்கட்கிழமை) ஆகிய இரு தினங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. எனவே திருச்சிக்கு பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் காலை 6:20 மணிக்கு சேலம் செல்லும் ரயிலை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில் பயணிகள் சங்கத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்
Similar News
News November 16, 2025
மயிலாடுதுறை: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள Management Trainee பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.50,000 – 1,60,000/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
6. கடைசி தேதி: 05.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 16, 2025
மயிலாடுதுறை: மழை அளவு விவரம் வெளியீடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்தது இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி செம்பனார்கோவிலில் அதிகபட்சமாக 42.20 மி.மீ. மயிலாடுதுறையில் 15 மி.மீ. சீர்காழியில் 11.80 மிமீ தரங்கம்பாடியில் 15 மிமீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 16, 2025
மயிலாடுதுறை: மிக கனமழை எச்சரிக்கை!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளையும் (நவ.17) இடி, மின்னலுடன் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


