News May 8, 2025

மயிலாடுதுறை: சீர்காழி மாணவி முதலிடம்

image

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உள்ள தனியார் பள்ளி மாணவி ஜெஸ்மியா 597 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதே பள்ளியில் பயிலும் மாணவி மதுஷா 596 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். சாதனை புரிந்துள்ள மாணவிகளுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News September 13, 2025

மாதானம் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை

image

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மாதானம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் திடிரென பலமான காற்று வீசிய நிலையில் மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

News September 13, 2025

மயலிலாடுதுறை மக்களே இத கவனிங்க!

image

மயிலாடுதுறை மக்களே “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், புத்தூரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 13.09.2025, காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. பொது மருத்துவம், குழந்தைகள், மகப்பேறு, எலும்பியல், இதய நோய், கண், பல், மனநலம், சித்ரவதை நோய் உள்ளிட்ட பல துறைகளில் இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது. மற்றவர்களும் பயனடைய SHARE பண்ணுங்க!

News September 12, 2025

மயிலாடுதுறை இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோயில், பொறையார், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோந்து செல்லும் போலீசாரின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!