News October 18, 2025
மயிலாடுதுறை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா நெல் சிறப்பு பருவ பயிருக்கு காப்பீட்டை நவம்பர் 15-ந் தேதிக்குள் விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ (இ-சேவை மையங்கள்) அல்லது www.pmfby.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News December 8, 2025
பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 287 மனுக்கள்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினார். மொத்தம் 287 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுவை ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
News December 8, 2025
மயிலாடுதுறை : இலவச சட்ட உதவிகள் வேண்டுமா!

மயிலாடுதுறை மக்களே உங்களுக்கு சட்ட உதவி தேவையா? இனி கவலை வேண்டாம். மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும். மேலும் தகவலுக்கு நாகை மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை அணுகலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!