News June 27, 2024
மயிலாடுதுறை கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று(ஜூன் 26) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிலையில், மதியம் முகாம் அலுவலகம் சென்றவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News November 8, 2025
மயிலாடுதுறை: 12th போதும்.. வங்கி வேலை!

மயிலாடுதுறை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <
News November 8, 2025
மயிலாடுதுறை: உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்

மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வீட்டை அடித்து சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார் மற்றும் வருவாய் துறையினரை கண்டித்து வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்றத்தை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்க செயலாளர் பாலாஜி தலைமையில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பால் வழக்காடும் பணிகள் பாதிக்கப்பட்டது.
News November 8, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை மாதாந்திர ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல் துறையில் இயங்கி வரும் வாகனங்களின் மாதாந்திர ஆய்வு எஸ்பி ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. காவல்துறை வாகனங்களை எஸ்பி நேரடி ஆய்வு மேற்கொண்டு வாகனங்களின் நிலை அவற்றில் பொருத்தப்பட்டுள்ள தொலைதொடர்பு சாதனங்கள் ஒளிரும் மின்விளக்குகள் ஆகியவற்றின் செயல் திறன் மற்றும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பழுதுநீக்கும் கருவிகளை தணிக்கை செய்தார்.


