News August 24, 2024
மயிலாடுதுறை கலெக்டர் அழைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆவின் பால் முகவர்கள், மொத்த விற்பனையாளர்கள், பால் முகவர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுத்துறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம்,கொள்ளிடம், செம்பனார்கோவில்,வைத்தீஸ்வரன்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள நபர்கள் தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கு நேரில் சென்று விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.
Similar News
News October 28, 2025
மயிலாடுதுறை: அஞ்சல் துறையில் வேலை-ரூ.30,000 சம்பளம்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.30,000
4. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
5. கடைசி தேதி : 29.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News October 28, 2025
மயிலாடுதுறை: உண்டியலை உடைத்து பணம் திருட்டு

கொள்ளிடம் அருகே தர்காஸ் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலை நேற்று அர்ச்சகர் திறந்த போது முன்புற கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் உண்டியல் அடியோடு அகற்றப்பட்டு காணிக்கைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் புதுப்பட்டனம் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
News October 28, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, குத்தாலம், செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் நேரடி தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்


