News January 1, 2025
மயிலாடுதுறை எம்.பி புத்தாண்டு வாழ்த்து

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பொதுமக்களால் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதா பொதுமக்களுக்கு 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு நல்வாழ்த்துக்களை இன்று தெரிவித்துள்ளார். மேலும் நமது இலக்கு மகிழ்வான மயிலாடுதுறை என அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News September 17, 2025
மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில், வாக்குச்சாவடி மையங்கள் மறு சீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு ஆலோசனைகள் பெறப்பட்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
News September 17, 2025
சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டம் சோதியக்குடி கிராமத்தில் சாலை சேதம் அடைந்துள்ள நிலையில், புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
News September 17, 2025
காதலியின் தாயார் வன்கொடுமை சட்டத்தில் கைது

அடியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து என்ற இளைஞர் கடந்த 15ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் புதிய திருப்பமாக வைரமுத்துவின் காதலி மாலினி என்பவரின் தாயார் விஜயா கைது செய்யப்பட்டுள்ளார். மாலின் சகோதரர் குகன் , அன்புநிதி பாஸ்கர் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்நிலையில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கை விடுத்துள்ளனர்.