News June 25, 2024
மயிலாடுதுறை எம்பி ஆனார் சுதா

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சுதா இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சுதா, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
Similar News
News October 24, 2025
மயிலாடுதுறை மக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 45,500 கனஅடியாக நேற்று மாலை அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து 60,000 கன அடி வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் காவிரி கரையோர மக்களுக்கு கலெக்டர்கள் மூலம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் கூறியுள்ளார்.
News October 24, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சீர்காழி, திருவெண்காடு, குத்தாலம், செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் நேரடி தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
News October 23, 2025
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழந்தைகள் நலன் தொடர்புடைய துறைகளுக்கான ஆய்வு கூட்டம் அதன் ஆணைய தலைவர் புதுக்கோட்டை விஜயா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


