News October 24, 2024

மயிலாடுதுறை: எடப்பாடி பழனிசாமி இரங்கல் 

image

மயிலாடுதுறை மாவட்ட கழக அதிமுக செயலாளர் பவுன்ராஜின் மாமியார் தையல்நாயகி அம்மாள் வயது முதிர்வால் இன்று காலமானார். இந்த செய்தி அறிந்த அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி இன்று இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

Similar News

News November 13, 2025

மயிலாடுதுறை: புதிய வருவாய் அலுவலர் பதவியேற்பு

image

மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலராக ஆர். பூங்கொடி நேற்று பதவியேற்றுக் கொண்டார். இவர் சென்னை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலராக இருந்து வந்துள்ளார். முன்னதாக மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி நாகை மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 13, 2025

மயிலாடுதுறை: ஆதார் அட்டை திருத்தம் இனி ஈஸி!

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.மேலும் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக் செய்து<<>> மாற்றம் செய்து கொள்ளலாம். இதுமட்டும் அல்லாது ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News November 13, 2025

மயிலாடுதுறை: மணல் கடத்திய லாரி பறிமுதல்

image

கொள்ளிடம் அருகே புத்தூர் பகுதியில் போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது புத்தூர் பட்டக்கால் தெருவில் சவுடு மண் இறக்கிக் கொண்டிருந்த லாரியை பிடித்து லாரி டிரைவரிடம் விசாரித்தபோது, திருவாலி கிராமத்திலிருந்து அனுமதியின்றி சவுடு மண் எடுத்துவந்ததும், புத்தூரில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. லாரி டிரைவரான தினேஷ் குமாரை (24) கைது செய்து மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!