News April 2, 2025

மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு 

image

தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 16 மாவட்ட இளைஞர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 8ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகிய பிரிவுகளில் அக்னிவீர் பொதுப்பணி, தொழில்நுட்ப பிரிவு, அலுவலக உதவியாளர் என ஆன்லைனில் ஏப்ரல் 10 வரை www.joinindianarmy.nic.in இணையதளத்தை அணுக வேண்டும் என திருச்சி கண்டோன்மெண்ட்டில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 29, 2025

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள நியாயவிலை கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள், நவம்பர் 2025 மாதத்திற்குரிய அரிசியை அக்டோபர் 2025 மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம். பருவமழை காலத்தில் மழை அதிகம் பெய்யலாம் என்பதை கருத்தில் கொண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில், நவம்பர் மாத ஒதுக்கீட்டை இந்த மாதமே பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News October 29, 2025

மயிலாடுதுறை: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, குத்தாலம், செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் நேரடி தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.

News October 29, 2025

மயிலாடுதுறை: மாவட்ட காவல் துறை தகவல்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், நாம் பயணம் செய்யும் நேரங்களில் அணியும் சூரிய ஒளியிலிருந்து, கண்களை காக்கும் மூக்கு கண்ணாடிகளை விட விபத்து ஏற்படும் நேரங்களில் தங்கள் விலைமதிப்பில்லா உயிரை காக்கும் தலைக்கவசமே சிறந்தது. மேலும் தலைகவசம் அவசியம் பற்றி இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!