News April 22, 2025
மயிலாடுதுறை: அம்மன் உருவம் பொறித்த அஞ்சல் தலை

கொள்ளிடம் பகுதியில் புகழ்பெற்ற புலீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. 108 அம்மன் கோயில்களில் 18வது சத்தி ஸ்தலமாக இக்கோயில் திகழ்கிறது. இங்குள்ள புலீஸ்வரி அம்மன் புலியின் மீது அமர்ந்துள்ள உருவப்படத்தை அஞ்சல் தலை மூலம் வெளியிட அஞ்சல் துறைக்கு கொள்ளிடம் சமூக சேவகர் பிரபு விண்ணப்பித்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று அஞ்சல் துறை மூலம் புலீஸ்வரி அம்மன் உருவப்படம் பொறித்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News April 25, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குட்கா விற்பனை மற்றும் கடத்தல் குற்றம் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க இலவச உதவி எண் 10581 அல்லது அலைபேசியில் 9626169492 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
News April 25, 2025
நடப்பாண்டில் 210 கடைகளுக்கு சீல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை சட்டவிரோத குட்கா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது 355 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட 356 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 169 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபட்ட 210 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சீல் வைத்து அபராதம் விதித்துள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
News April 24, 2025
மயிலாடுதுறை: நற்கருணை வீரன் விருது அறிவிப்பு

பெரும் சாலை விபத்தில் சிக்கியவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவரது உயிரை காப்பாற்றும் நபருக்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சார்பில் நற்கருணை வீரன் விருது வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு மத்திய அரசின் ரூ. 5,000 மற்றும் மாநில அரசின் ரூ.5,000 என மொத்தம் ரூ.10,000 மற்றும் பாராட்டு சான்றும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.