News August 17, 2024
மயிலாடுதுறையில் விருது பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்டு சாதனை புரிந்த 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண்குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24-ந் தேதி விருது வழங்கப்படுகிறது. இந்த விருதினை பெறுவதற்கு உரிய ஆவணங்களுடன் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News December 30, 2025
மயிலாடுதுறை: ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு

மயிலாடுதுறை அடுத்த திருஇந்தளூரில் பிரசித்தி பெற்ற பரிமளரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க ஆலயங்களுள் இது 5-வது ஆலயமாகும். இதில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி ஒட்டி அதிகாலையில் திருஇந்தளுர் பரிமளரெங்கநாதர் ஆலய சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெருமாள் மங்களகிரி படிச்சட்டத்தில் எழுந்தருளினார்.
News December 30, 2025
மயிலாடுதுறை: ஒரே நாளில் குவிந்த 327 மனுக்கள்

மயிலாடுதுறை ஆட்சியரகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர். இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 327 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை பெற்ற ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
News December 30, 2025
மயிலாடுதுறை: கொழுந்துவிட்டு எரிந்த வீடு!

தரங்கம்பாடியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர் கூரை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பரவி வீடு முழுவதும் கொளுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீ பரவாமல் அணைத்தனர். இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகின்றது.


