News August 7, 2024

மயிலாடுதுறையில் மெமு ரயிலாக மாற்றம்

image

மயிலாடுதுறையில் இருந்து தினசரி காலை 8.05 மணிக்கு திருச்சி செல்லக்கூடிய ரயில் இன்று முதல் மெமு வண்டியாக மாற்றப்பட்டு இயங்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் நேற்று(அக.06) தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 20 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயங்கி வந்த நிலையில் தற்போது 8 பெட்டிகள் மட்டுமே இருக்கக்கூடிய மெமு ரயிலாக இயக்கப்பட உள்ளது.

Similar News

News July 7, 2025

விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்

image

குறுவை சாகுபடி திட்டத்தில் இயந்திர நடவு மூலம் நெல் நடவு செய்துள்ள விவசாயிகளுக்கு அரசு மானியமாக ரூ.4000 வழங்க உள்ளது. எனவே இயந்திர நடவு மேற்கொண்டுள்ள விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் பயனடைய உடனடியாக உழவர் செயலி அல்லது அருகில் உள்ள பொது சேவை மையம் அல்லது வேளாண் உதவி அலுவலர்கள் மூலம் பதிவேற்றம் செய்து மானியம் பெறலாம் என கொள்ளிடம் உதவி இயக்குனர் எழில் ராஜா தெரிவித்துள்ளார்.

News July 6, 2025

இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்ட போலீசார் இன்று இரவு (ஜூலை 6) 11 மணி முதல் நாளை (ஜூலை 7) காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ளனர். ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் காவல்துறை அதிகாரிகள் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள காவல் அதிகாரிகளின் நேரடி தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

News July 6, 2025

மயிலாடுதுறை மக்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய எண்கள்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைக்கு நீங்கள் அணுக வேண்டிய எண்கள்:
▶வட்டாட்சியர்,தரங்கம்பாடி-04364-289463,
▶வட்டாசியர்,சீர்காழி-04364-270324,
▶வட்டாட்சியர்,குத்தாலம்-04364-221150,
▶வட்டாட்சியர்,மயிலாடுதுறை-04364-290797.
இதை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.!

error: Content is protected !!