News August 7, 2024
மயிலாடுதுறையில் மெமு ரயிலாக மாற்றம்

மயிலாடுதுறையில் இருந்து தினசரி காலை 8.05 மணிக்கு திருச்சி செல்லக்கூடிய ரயில் இன்று முதல் மெமு வண்டியாக மாற்றப்பட்டு இயங்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் நேற்று(அக.06) தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 20 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயங்கி வந்த நிலையில் தற்போது 8 பெட்டிகள் மட்டுமே இருக்கக்கூடிய மெமு ரயிலாக இயக்கப்பட உள்ளது.
Similar News
News November 23, 2025
மயிலாடுதுறை: வெளுக்க போகும் மழை – எச்சரிக்கை!

தென்கிழக்கு வாங்க் கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.23) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 23, 2025
மயிலாடுதுறை: பீரோவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு!

குத்தாலம் உத்ர வடக்கு வீதியை சேர்ந்தவர் சாய்நாதன்(37). இவர் குத்தாலத்தில் துணிக்கடை வைத்து உள்ளார். சாய்நாதன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது வீட்டின் பிரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகைகள் மற்றும் ரூ.25 லட்சம் திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சாய்நாதன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
News November 23, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இரவு 10 மணி முதல், (நவ.22) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.


