News May 17, 2024
மயிலாடுதுறையில் மிதமான மழை…!

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மயிலாடுதுறை உட்பட 9 பல மாவட்டங்களில் இன்று(மே 17) காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 18, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விபரப்பட்டியல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலிசாரின் விவரங்கள் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், மணல்மேடு,, சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு உள்ளிட்ட இடங்களில் இன்று இரவு முதல் நாளை காலை 6 மணிவரை ரோந்து பணி மேற்கொள்ளும் போலீசாரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கை குறித்து புகார் தெரிவிக்கலாம்.
News September 17, 2025
மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில், வாக்குச்சாவடி மையங்கள் மறு சீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு ஆலோசனைகள் பெறப்பட்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
News September 17, 2025
சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டம் சோதியக்குடி கிராமத்தில் சாலை சேதம் அடைந்துள்ள நிலையில், புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.