News March 19, 2024
மயிலாடுதுறையில் பைக் திருடிய இருவர் கைது

மயிலாடுதுறை அருகே சேந்தங்குடி பகுதியில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். தொடர்ந்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்த ஆதிகேசவன் மற்றும் கவியரசன் ஆகிய இருவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
Similar News
News April 12, 2025
குரூப் 1 இலவச பயிற்சி – ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறையில் குரூப் 1 மற்றும் யுஎஸ்ஆர்பி, எஸ்.ஐ. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். விருப்பம் உள்ளவர்கள் ஏப்.15ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9499055904 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்துகொள்ளலாம். பயனுள்ளவர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்.
News April 12, 2025
மீன்பிடித் தடைக்காலம் ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மயிலாடுதுறையில் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மின்பிடித் தடைக்காலம் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மீன்பிடி தடைக்காலத்திற்கு முன் கடலுக்கு சென்ற மீனவர்கள் ஏப்.14 இரவு 12 மணிக்குள் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க)
News April 11, 2025
மயிலாடுதுறையில் பார்க்க வேண்டிய கோயில்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய 10 முக்கிய கோவில்கள்
1. வைத்தீஸ்வரன் கோயில்
2. சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்
3. திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்
4. திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில்
5. சுவேதாரண்யேசுவரர் கோயில்
6. மயூரநாதசுவாமி கோயில்
7. பரிமளா ரங்கநாதர் கோவில்
8. வள்ளலார் கோயில் (திரு இந்தலூர் சிவன் கோயில்)
9. புனுகீஸ்வரர் கோயில்
10. திருமணஞ்சேரி கோயில், ஷேர் பண்ணுங்க