News October 8, 2024
மயிலாடுதுறையில் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் வெளியீடு
மயிலாடுதுறை மாவட்டத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் முறையீடுகளை 18002021989 என்ற தொலைபேசி எண் அல்லது 14566 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார். மேலும் அலுவலக நாட்களில் புகார் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2024
மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
வங்கக்கடலில் வரும் நவ.22-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் வரும் நவ.21-ஆம் தேதி (வியாழன்) நள்ளிரவு முதல் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் வரும் 21-ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என்று மீன்வளத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
News November 19, 2024
மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் நவம்பர் 29-ஆம் தேதி நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று பயன்பெறுமாறு ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
News November 19, 2024
விசிக தலைவருடன் திமுக நிர்வாகி சந்திப்பு
சீர்காழி அருகே மேலையூர் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரான முத்து தேவேந்திரன் தனது இல்ல திருமண விழாவை முன்னிட்டு விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி அழைப்பு விடுத்தார். அவருடன் ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.