News May 17, 2024
மயிலாடுதுறையில் பிறந்தநாள் வாழ்த்து

மயிலாடுதுறையில் அறம் செய்ய அறக்கட்டளையின் தலைவரும் , காவலருமான சிவா அவர்களின் பிறந்தநாள் விழாவில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் பங்கேற்று பிறந்தநாள் வாழ்த்துக்களை நேற்று தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அப்போது ஏராளமான முக்கியஸ்தர்கள் உடன் இருந்தனர்.
Similar News
News January 3, 2026
மயிலாடுதுறை: BE படித்தோருக்கு ரிசர்வ் வங்கியில் வேலை!

இந்திய ரிசர்வ் வங்கியில் இன்ஜினியர் & நிபுணர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உள்ளது
1. வகை: பொதுத்துறை அரசு வேலை
2. பணியிடங்கள்: 93
3. வயது: 21-41
4. சம்பளம்: ஆண்டுக்கு ரூ.3.10 லட்சம் முதல் ரூ. 4.80 லட்சம் வரை
5. கல்வித் தகுதி: BE / B.Tech / M.Tech
6. கடைசி தேதி: 06.01.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 3, 2026
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணியில் உள்ள அலுவலர்களுடன் கலந்துரையாடி விவரங்களை கேட்டறிந்தார்.
News January 3, 2026
மயிலாடுதுறை: கழிவறை கட்ட ரூ.12,000 ஊக்கத் தொகை!

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் கிராம ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE செய்து அவர்களும் பயனடைய உதவுங்கள்.!


