News March 28, 2024
மயிலாடுதுறையில் பிரதான கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்பு

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக 30 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதனிடையே பிரதான கட்சிகளின் வேட்பு மனுக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் – சுதா , அதிமுக – பாபு , பாமக – ம.க. ஸ்டாலின் , நாம் தமிழர் கட்சி காளியம்மாள் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
Similar News
News November 22, 2025
மயிலாடுதுறை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வங்கிகள் சார்பில் நவ.26-ம் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. கல்வி கடன் பெற விரும்பும் மாணவ மாணவிகள் அனைவரும் http://pmvidyalaxmi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு எச்சரிக்கை!

தென்கிழக்கு வாங்க் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.22) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 22, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இரவு முதல், (நவ.21) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.


