News April 20, 2025
மயிலாடுதுறையில் பயிற்றுநர்கள் நேர்முகத் தேர்வு

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஎன்எஸ்யுஆர்பி இலவச பயிற்சி வகுப்புகளுக்கான பயிற்றுநர்கள் நேர்முகத் தேர்வு வருகிற ஏப்ரல் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் தகுதி வாய்ந்த இளைஞர்கள் தங்களது சுய விபரங்களை studycircledeomayil@gmail.com என்ற இணைய முகவரிக்கு அனுப்பலாம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News December 21, 2025
மயிலாடுதுறை: பணி நியமன ஆணைகள் வழங்கிய ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் பொறையாரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் பூம்புகார் MLA நிவேதா முருகன் ஆகியோர் தொடங்கி வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
News December 21, 2025
மயிலாடுதுறை: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க!
News December 21, 2025
மயிலாடுதுறை: மரப்பாலம் அமைக்கும் பணி தீவிரம்

திருவெண்காடு அருகே தென்னாம்பட்டினம் ஊராட்சி மாத்தாம்பட்டினம் கிராமத்தில் பள்ளி மாணவர்கள் முல்லை ஆற்றில் ஆபத்தான முறையில் மூங்கில் பாலத்தில் பயணம் செய்து வந்தனர். தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் அங்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உடனடியாக தற்காலிக புதிய மரப்பாலம் அமைத்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் மேற்பார்வையில் பாலம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.


