News June 14, 2024
மயிலாடுதுறையில் நாளை மின் நிறுத்தம்

மயிலாடுதுறை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட சில மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நாளை ஜூன் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து நலத்துக்குடி , முளப்பாக்கம் செருதியூர் , கூறைநாடு மற்றும் நீடூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட அருவாப்படி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News May 7, 2025
அட்சய திருதியையில் இங்கு சென்று வழிபடுங்கள்

அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியைக்கு தங்க நகைகள், மஞ்சள் உள்ளிட்ட மங்களகரமான பொருட்களை வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. எனவே மயிலாடுதுறை மக்களே உங்கள் வீட்டின் அருகே உள்ள மகாலெட்சுமி, பெருமாள் மற்றும் குபேரர் கோயிலுக்கு சென்று வழிபட்டு தங்கம், மஞ்சள் மற்றும் கல்உப்பு போன்ற மங்கள பொருட்களை வாங்குங்கள். எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News April 30, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜமாபந்தி- ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய 4 தாலுகாகளிலும் வருகிற மே 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற உள்ளது. இதற்காக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வேளாண்துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய் தீர்வாய அலுவலரிடம் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News April 29, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜமாபந்தி- ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய நான்கு தாலுகாகளிலும் வருகிற மே 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற உள்ளது. இதற்காக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வேளாண்துறை தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய் தீர்வாய அலுவலரிடம் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.