News August 14, 2024
மயிலாடுதுறையில் நாளை மதுக்கடைகள் மூடப்படும்

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் FL1/FL2/FL3/FL3A/FL3AA மற்றும் FL11 உரிமம் பெற்ற மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் அனைத்தும் நாளை சுதந்திர தினம் அன்று தற்காலிகமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் நாளை விற்பனை இல்லாத நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Similar News
News November 6, 2025
மயிலாடுதுறை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

மயிலாடுதுறை மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 6, 2025
மயிலாடுதுறை: அரசு மருத்துவமனையில் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி பேரூராட்சி பெற்ற தரங்கம்பாடி பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது அங்கு பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருந்து இருப்புகள் நிலை குறித்தும் கேட்டறிந்தார்.
News November 6, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை அளவு விவரம்

வெப்பசலனம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று இரவு லேசான மழை பெய்தது. இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி மயிலாடுதுறையில் அதிகபட்சமாக 26 மிமீ மழை பதிவாகியுள்ளது. செம்பனார்கோயிலில் 9.20 மிமீ மழை பெய்துள்ளது. கொள்ளிடத்தில் 1.20 மிமீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


