News March 25, 2025
மயிலாடுதுறையில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (மார்ச் 26) புதன்கிழமை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த எரிவாயு பயன்படுத்துவோர் சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது புகார்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையலாம் என அறிவித்துள்ளனர். ஷேர் செய்யுங்கள்
Similar News
News October 28, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, குத்தாலம், செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் நேரடி தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்
News October 27, 2025
மயிலாடுதுறை மக்களே இதை தெரிஞ்சுகோங்க!

மயிலாடுதுறை மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <<-1>>TN-ALERT<<>> என்ற APP-ஐ பதிவிறக்கம் செய்து, வானிலை தொடர்பான தகவலை தெரிந்து கொள்ளலாம். இப்போதே பதிவிறக்கி நம் பாதுகாப்பை உறுதி செய்து முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
News October 27, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற நவ.1-ம் தேதி சனிக்கிழமை உள்ளாட்சிகள் தினத்தன்று 241 கிராம ஊராட்சிகளில் கிராம சுபை கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் கிராம வரவு செலவு கணக்குகள், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே அனைத்து ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.


