News August 10, 2024
மயிலாடுதுறையில் தொழில் தொடங்க ரூ.3 லட்சம்

பிற்படுத்தப்பட்டோர் , மிக பிற்படுத்தப்பட்டோர் & சீர் மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 10 நபர்களைக் கொண்ட ஒரு குழுவிற்கு ஒரு ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைத்திட ஏதுவாக ரூ.3 லட்சம் வீதம் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்புகொண்டு விண்ணப்பித்து பயன்பெறுமாறு ஆட்சியர் மகாபாரதி நேற்று(ஆக.,9) தெரிவித்துள்ளார்.
Similar News
News October 22, 2025
மயிலாடுதுறை: இந்திய அஞ்சல் துறையில் வேலை

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், IPPB வங்கியில் 348 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க
News October 22, 2025
மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசரக்கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. ‘1077’, ‘04364-222 588’, ‘7092255255’ ஆகிய எண்கள் மூலமாக மழை, வெள்ள மற்றும் அவசர உதவிக்கு கட்டுப்பாடு அறையை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. SHARE
News October 22, 2025
மயிலாடுதுறை: மழை கண்காணிப்பு அதிகாரி நியமனம்

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 12 மாவட்டங்களுக்கு மழை கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கோ ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் கவிதா ராமு இ.ஆ.ப கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.