News April 13, 2024
மயிலாடுதுறையில் தபால் ஓட்டு செலுத்திய எஸ்பி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூறு சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தனது வாக்கினை தபால் ஓட்டு மூலம் இன்று பதிவு செய்தார். அப்போது, தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு காவல் அதிகாரிகளும் தங்களது வாக்கினை செலுத்தினர்.
Similar News
News November 25, 2025
மயிலாடுதுறை அருகே 1008 சங்காபிஷேகம்

திருவெண்காடு கிராமத்தில் புதன் ஸ்தலமான ஸ்ரீ சுவேதாரணேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு நேற்று 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு ஹோம பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
News November 25, 2025
மயிலாடுதுறை: சொந்தமாக தொழில் தொடங்க வாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்ட இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News November 25, 2025
மயிலாடுதுறை: பூட்டை உடைத்து திருட்டு!

மாப்படுகையைச் சேர்ந்தவர் குணசேகரன் (57). இவர் குடும்பத்துடன் கடந்த 21-ந்தேதி காரைக்குடி சென்றுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு 9 பவுன், 2 கிராம் நகைகள் மற்றும் வெள்ளி காணாமல் போயிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த குணசேகரன் இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


