News September 14, 2024

மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற கடைகள், மதுபானக்கூடங்கள் அனைத்தும் வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபி தினத்தை முன்னிட்டு விற்பனை இல்லாத நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் தற்காலிகமாக டாஸ்மாக் கடைகளை ஒருநாள் மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Similar News

News October 31, 2025

மயிலாடுதுறை: மெசேஜில் வரும் ஆபத்து எச்சரிக்கை

image

செல்போன் டவர் அமைக்க இடம் தேவை என்று தங்களுக்கு வரும் குறுஞ்செய்தியை நம்பி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. டவர் அமைக்க காலியிடம் தேவை முன்பணம், வாடகை வழங்கப்படும் என வரும் குறுஞ்செய்திகளை க்ளிக் செய்தால் பணத்தை இழக்க நேரிடலாம். எனவே இதுபோன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

News October 31, 2025

மயிலாடுதுறை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

News October 31, 2025

மயிலாடுதுறை: குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

image

சீர்காழி தென்பாதி வஉசி தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (48). கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற சங்கர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை திருவேங்கடம் பிள்ளை குளத்தில் சங்கர் தண்ணீர் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த சீர்காழி போலீசார் உடலை மீட்டு, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!