News April 12, 2024
மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்க தயார்

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் நேற்று சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் வனத்துறையினர் சிறுத்தை தொடர்பாக தகவல் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் , தகவல்களை மயிலாடுதுறை மற்றும் அரியலூர் வனத்துறையினர் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுத்தையை பிடிக்க இரு அணியினரும் தயார் நிலையில் உள்ளதாக நாகை வன உயிரின காப்பாளர் இன்று கூறியுள்ளார்.
Similar News
News April 19, 2025
இனி இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறையில் அனைத்து வகை கனிமங்களும் எடுத்துச் செல்வதற்கு வழங்கப்படும் நடைசீட்டுகளை இனிமேல் இணைய வழி வாயிலாக மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 28ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ள நடைசீட்டுக்கள் வழங்கும் முறை 30ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. http://mimas.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக குத்தகைதாரர்கள் நடைசீட்டு பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News April 19, 2025
போக்குவரத்துக் கழகத்தில் வேலை விண்ணப்பிப்பது எப்படி

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஏப்.,21ஆம் தேதிக்குள் இங்கு <
News April 18, 2025
நாளை இலவச முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம்

மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் தர்மபுரம் கலைக்கல்லூரி தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை சார்பில் தருமபுரம் ஆதீனம் மணிவிழாவை முன்னிட்டு நாளை சனிக்கிழமை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் காலை 8:30 மணி முதல் 2:00 மணி வரை இலவச முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. முகாமில் ரூ.5000 மதிப்புள்ள இசிஜி எக்கோ ஸ்கேன் பரிசோதனை முற்றிலும் இலவசமாக செய்யப்படவுள்ளது. பொதுமக்கள் பங்கேற்று பயன பெறலாம்.