News April 8, 2024
மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை

மயிலாடுதுறையில் சிறுத்தையை கண்டறிய கோவை WWF- India நிபுணர் குழு 30 கேமரா ட்ராப்புகளுடன் களமிறங்கியது. சிறுத்தை நடமாட்டத்தை விஞ்ஞானப்பூர்வமாக கண்டறிய களப்பணியாளர்களுடன் கூட்டாக பணிகள் தீவிரமடைந்துள்ளது. நண்டலாறு – வீரசோழன் ஆறு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தை குறைக்க வனத்துறை தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.
Similar News
News April 26, 2025
மயிலாடுதுறை: 3935 அரசு பணியிடங்களுக்கான அறிவிப்பு

இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 12 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்படும் என TNPSC தெரிவித்துள்ளது. மே 24 ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…
News April 26, 2025
மயிலாடுதுறை: கேது தோஷம் நீக்கும் தலம்

மயிலாடுதுறை மாவட்டம், கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள நாகநாதர் கோயிலில், கேது பகவான் அனுக்கிரக மூர்த்தியாக காட்சியளிக்கிறார். 18 மாதத்திற்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் கேது பகவான் இன்று மாலை 4:20 மணிக்கு சிம்ம ராசிக்கு இடம் பெயர்கிறார். இத்தலத்தில் வழிபட்டால் கேது தோஷம் நிவர்த்தி அடையும். இதை உறவினர், நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்…
News April 26, 2025
மயிலாடுதுறை: கூலித்தொழிலாளி தற்கொலை

மணல்மேடு அருகே காருக்குடி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வேல்முருகன் (39). சம்பவத்தன்று வேல்முருகன், மது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றபோது, அவருக்கும், குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில், மன வேதனை அடைந்த வேல்முருகன், தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.