News August 7, 2024
மயிலாடுதுறையில் கனமழைக்கு வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்பதை கமென்டில் தெரிவிக்கவும்
Similar News
News August 9, 2025
மயிலாடுதுறை: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த எண்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். 24 மணி நேரமும் பாதுகாப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
சைபர் பாதுகாப்பு ( 1930 )
இந்த எண்களை Save பண்ணி வச்சுக்கோங்க ! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News August 9, 2025
மயிலாடுதுறை: கலெக்டருக்கு சிலம்பம் சுற்றி காட்டிய சிறுவன்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த முடி திருச்சம்பள்ளி கிராமத்தில் செயல்பட்டு வரும் நியாய விலை கடையில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த சிலம்பம் விளையாடும் சிறுவர்களிடம் சிறிது நேரம் கலந்துரையாடினார். அப்போது சிலம்பு சுற்றி காண்பித்த சிறுவனை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.
News August 9, 2025
241 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

சுதந்திர தினத்தை ஒட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை 241 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.