News April 17, 2025
மயிலாடுதுறையில் கட்டுரை, பேச்சுப் போட்டி, ஆட்சியர் அழைப்பு

மயிலாடுதுறை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சு போட்டி நடைபெறவுள்ளது. தமிழ் வளர்ச்சி சார்பில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் மே 9ஆம் தேதி நடைபெற உள்ளது. பிளஸ் 1 & பிளஸ் 2 மாணவர்களுக்கு தியாகி நாராயணசாமி நகராட்சி பள்ளியிலும், கல்லூரி மாணவர்களுக்கு ஞானாம்பிகை கல்லூரியிலும் காலை 9 மணிக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News September 16, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரங்கள் வெளியீடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோயில், மணல்மேடு, சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு உள்ளிட்ட இடங்களில் இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை ஆறு மணி வரை ரோந்து பணி மேற்கொள்ளும் போலீசாரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு, குற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.
News September 15, 2025
மயிலாடுதுறைக்கு இப்படி ஒரு வரலாறா?

ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில், (ஆந்திரம் உள்ளடக்கியது) 29 ஊர்கள் மட்டுமே நகரம் என அடையாளம் காணப்பட்டு நகராட்சிகளாக ஆக்கப்பட்டது. அதில் முக்கியமாக நமது மயிலாடுதுறை நகராட்சியும் ஒன்று. இதன் மூலம் பறந்து விரிந்த சென்னை மாகாணத்தில் மயிலாடுதுறையின் முக்கியத்துவத்தை அறிய முடிகிறது. மேலும் இங்கு பல வாணிபங்கள் நடந்ததையும் இது உறுதிப்படுத்துகிறது. ஷேர் பண்ணுங்க
News September 15, 2025
மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் மனு பெற்ற ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் மாவட்ட ஆட்சியர் மனு பெற்றார்.