News August 11, 2024
மயிலாடுதுறையில் கடலில் குளிக்க தடை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை பகுதி என்பது வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள ஓசோன் காற்று வீசும் பகுதியாகும். நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் இன்று வார விடுமுறை என்பதால், பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும். எனவே மாலையில் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News November 24, 2025
மயிலாடுதுறை: ஆற்றில் சொகுசு கார் கவிழ்ந்து விபத்து

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காழியப்பநல்லூர் ஊராட்சியில் அனந்தமங்கலம் அருகே உள்ள ஆற்றுப் பகுதியில், நேற்று இரவு சாலையில் சென்ற சொகுசு கார் ஒன்று நிலை தடுமாறி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில் காரில் பயணம் செய்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
News November 24, 2025
மயிலாடுதுறை: நீர் நிலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், தற்போது பரவலாக பல இடங்களிலும் கனமழை பெய்து வருவதன் காரணமாக ஆறுகள் குளங்களில் தண்ணீர் அதிகளவு தேங்கியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள ஆறு, குளம், வாய்க்கால் மற்றும் குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு அருகில் குழந்தைகளை செல்ல அனுமதிக்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு காவல்துறை சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News November 24, 2025
மயிலாடுதுறை: மீண்டும் கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


